About ERD

 

இலங்கைக்கான வெளிநாட்டு  நிதி உதவியினைத் திரட்டுவதும் அவற்றினை  ஒருங்கிணைப்புச் செய்வதும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பொறுப்பாகும். இலங்கை அரசின் அபிவிருத்தி கொள்கை வேலைச் சட்டகத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ள  அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் வசதியளிக்கிறது.

தூர நோக்கு

உயர்வான நடுத்தர வருமானத்தை அடைவதற்கு நாடு எழுச்சியூட்டப்பட்டதன் காரணமாக இலங்கையின் வளர்ச்சியினை துரிதப்படுத்துவதற்கு வெளிநாட்டு நிதியினைத் திரட்டுவதன் மூலமும் முகாமை செய்வதன் மூலமும் தேவையான அறிவு மற்றும் நிபுணத்துவ ரீதியான சிறந்த தரத்தை அடைதல்.

செயற்பணி

நாட்டின் நீண்ட காலக்கடனினை நிலைபேறான தனமையைப் பேணும் அதே வேளை, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஆதரவில் குறைந்த நிபந்தனைகளுடன்  சாத்தியமான குறைந்த செலவில் வெளிநாட்டு நிதியினைத் திரட்டுதல்

செயற்பாடுகள்

 

  • அபிவிருத்தி உதவி மூலோபாயங்கள் மற்றும் முதன்மைகள் என்பனவற்றினை அடையாளம் காண்பதற்காக அபிவிருத்திப் பங்காளர்களுடன் கலந்தலோசனைகளை நடாத்துதல்.
  • நிரல் அமைச்சுக்கள் / நிறுவனங்கள் என்பனவற்றுடன் கலந்துரையாடி அபிவிருத்திப் பங்காளர்களது நாட்டுக்கான வருடாந்த உதவி நிகழ்ச்சித் திட்டங்ளை ஒருங்கிணைத்தல்.
  • அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய  தயாரிக்கப்பட்ட அரசாங்கத்தின் பொது முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்தாற் போல், நிரல் அமைச்சுக்கள் / நிறுவனங்கள் மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களம் என்பனவற்றுடன் கலந்துரையாடி வெளிநாட்டு நிதியளிப்புக்கான கருத்திட்ட வழி வகைகளைத் தயாரித்தல் .
  • நன்கொடையாளர் செயற்பணிச் செயற்பாடுகளை விடய ஆய்வு மட்டத்திலிருந்து மதிப்பீட்டு மட்டம் வரை ஒருங்கிணைத்தல்.
  • வெளிநாட்டு நிதி உதவி தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடாத்துதல் கடன் / மானியம் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யதல் மற்றும் அவற்றினை  பயனுறுதிமிக்வையாக மாற்றுதல். இதற்காக,

o    அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் என்பனவற்றுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துதல்,

o    உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதற்காக அரசு ஒப்புதல் மற்றும் அதிகாரம் என்பனவற்றினை பெற்றுக்கொள்ளல்,

o    திட்ட அமுலாக்கல்   நிறுவனங்களுடன் துணை கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடல்.

o    கடன் ஒப்பந்தங்களின் பயனுறுதித் தன்மையினை உறுதிப்படுத்தும் வகையில் அவற்றின் முன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தல்.

  • நன்கொடையாளர் நிதியளிப்புக் கருத்திட்டங்களின் செயலாக்கத்தினை கீழ் வருமாறு மேற்பார்வை செய்தல்.

o    செயற்பணி மீளாய்வு சம்பந்தமாக  அபிவிருத்திப் பங்காளர்களினால் குறிப்பீடு செய்யப்பட்ட  செயற்பாடுளையும், பின்தொடர்வது தொடர்பாக விதிப்புரை செய்யப்பட்ட செயற்பாடுளையும் ஒருங்கிணைத்தல்.

o    வெளிநாட்டு நிதியளிப்புக் கருத்திட்டங்களின் செயலாக்கத்தினைக் கண்காணிப்பதற்காக நிரல் அமைச்சுக்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் செயலாக்கல் குழுக்களில் பங்கேற்றல், அபிவிருத்திப் பங்காளர்களுடன் ஒன்றிணைந்து கருத்திட்டங்களின் செயலாக்கத்தனை  மீளாய்வுசெய்தல்.

  • தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டங்கள் கீழ் நன்கொடையாளர்களினால் வழங்கப்பட்ட வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளை முகாமை செய்தல்.
  • வெளிநாட்டு படுகடன் தொடர்பான அரசாங்க தரவுத் தளத்தினை முகாமை செய்தல். அதற்காக;

o    நிரல் அமைச்சுக்கள், திறைசேரி ,மத்திய வங்கி மற்றும் தனியாள் கருத்திட்ட அலுவலகங்கள் என்பனவற்றின் பயன்பாட்டிற்காக வெளிநாட்டுக் கடன் / மானிய அர்ப்பணிப்புக்கள், பகிர்ந்தளிப்புக்கள் மற்றும் மீள்கொடுப்பனவுகள் தொடர்பாக தரவுத் தளம் ஒன்றினைப் பேணுதல்   

o    வெளிநாட்டு படுகடன் சேவை தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கியின் அரசாங்க படுகடன் அத்தியட்சகருக்கு வழங்குதல்.

 

  • அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்காக உள்ளூர் வங்கி நிதியளிப்புச் சேவைகளை ஏற்பாடு செய்தல், சர்வதேச நாணய முறிகளை விநியோகித்தல், மற்றும் உள்நாட்டு படுகடன்  மூலதனச் சந்தையினை மேற்பார்வை செய்தல்.

  • வெளிநாட்டு நிதியளிப்புச் செய்யப்பட்ட கருத்திட்டங்கள் ஒவ்வொன்றும் தொடர்பிலும் அரசாங்க வருடாந்த வரவு செலவுத் திட்ட தயாரிப்பு செயல் முறைக்கு வசதியளித்தல்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


    தூர நோக்கு

    செயற்பணி

    செயற்பாடுகள்