gov lk large

நோக்கு

உயர்வான நடுத்தர வருமானத்தை அடைவதற்கு நாடு எழுச்சியூட்டப்பட்டதன் காரணமாக இலங்கையின் வளர்ச்சியினைத் துரிதப்படுத்துவதற்கு வெளிநாட்டு நிதியினைத் திரட்டுவதன் மூலமும் முகாமை செய்வதன் மூலமும் தேவையான அறிவு மற்றும் நிபுணத்துவ ரீதியான சிறந்த தரத்தை அடைதல்.

செயற்பணி

நாட்டின் நீண்ட காலக் கடனினை நிலைபேறான தன்மையைப் பேணும் அதேவேளை இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஆதரவில் குறைந்த நிபந்தனைகளுடன் சாத்தியமான குறைந்தசெலவில் வவளிநாட்டு நிதியினைத் திரட்டுதல்.

எமது நோக்கங்கள்

  • முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள துறைகளின் அபிவிருத்தித் தேவைகளுக்கு நிதி வழங்குவதற்கு குறைந்த செலவுடனும், குறைவான இடருடனும் வெளிநாட்டு வளங்களைத் திரட்டுதல்.
  • வெளிநாட்டு வளங்களை வினைத் திறனுடையதாகவும், பயனுறு விளைவுள்ளதாகவும் பயன்படுத்துவதற்கு வசதியளித்தல்.
  • நாட்டின் நீண்ட கால வெளிநாட்டுப் படுகடன்களை நிலைபேறான தன்மையைப் பேணுவதற்குப் பங்களிப்புச் செலுத்துதல்.
  • வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புக்களை வினைத்திறனான பயன்பாட்டின் மூலம் அரச துறையின் மனித வள அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செலுத்துதல்.
  • திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பாரிய பொறுப்புக்களை பயனுறு விளைவுள்ளதாகவும், செயற்திறன் கொண்டதாகவும் நிறைவேற்றுவதற்கு திணைக்களத்தின் திறன்களை தொடர்ந்து வலுவூட்டுதல்.

எமது விழுமியங்கள்

  • சகல சட்டங்களையும், ஒழுங்கு விதிகளையும் கடைபிடித்தல் மற்றும் சிறந்த குண நலன்களோடு இணங்கி நடப்பதன் ஊடாகவும், ஆளுமை, வெளிப்படைத்தன்மை, வெளிப்படுத்துகை, மற்றும் ஒழுக்க நெறிகளின் அதி உயர் தரத்தைப் பேணுதல்.
  • திணைக்களத்தின் அக்கறையை முன்னிறுத்தி அதி உயர் தரமான தனிப்பட்ட நேர்மையைப் பேணுதல்.
  • பணிக் குழுவினரின் செயலாற்றுகைகளை வெளிக்காட்டக் கூடியவாறான பரஸ்பர மதிப்பு மற்றும் நம்பிக்கைக்கான சூழலை ஏற்படுத்திப் பூரணமான சாத்தியங்களை நிறைவேற்றுதல்.
  • பங்காளர்களுடன் உண்மையானதும்நியாயமானதுமான தொடர்புகளின் ஊடாக ஒழுக்க நெறிகளின் நீண்ட கால உறவுகளை மேம்படுத்துதல்.
  • சகல மட்டங்களிலுமுள்ள பணியாளர்களுக்கு அதிகாரமளித்தல், தலையீடுகளைக் குறைத்தல்மற்றும் அவர்களைக் கடமைப் பொறுப்புள்ளவர்களாக இருக்குமாறு வேண்டுதல்.
FaLang translation system by Faboba