gov lk large

திறைசேரியானது கி.பி. 1806 இல் வருமானக் கட்டுப்பாளரின் கீழ் உப நிறுவனமொன்றாகத் தாபிக்கப்பட்டது. இது 1834 இல் பிரதான நிறுவனமொன்றாக தரமுயர்த்தப்பட்டது. 1948 இல் திறைசேரி நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த காலப்பகுதியின் போது, திறைசேரியின் பணிகள் பல்வேறு பிரிவுகளினால் முன்னெடுக்கப்பட்டது. பொது நிர்வாகப் பிரிவு, வரவுசெலவுத்திட்டப் பிரிவு, கணக்குகள் மற்றும் கொடுப்பனவுகள் பிரிவு, நிதிப் பிரிவு, பொருளாதார அலுவல்கள் பிரிவு, அரசிறைக் கொள்கைப் பிரிவு, வெளிநாட்டு வளங்கள் பிரிவு, பொது தொழில்முயற்சிகள் பிரிவு, தொடர்பாடல் பிரிவு, உள்ளகக் கணக்காய்வு மற்றும் புலணாய்வுப் பிரிவு, பெறுகை மற்றும் ஆலோசனை சேவைப் பிரிவு, காப்புறுதிப் பிரிவு என்பன அவையாகும். வெளிநாட்டு வளங்கள் பிரிவானது வெளிநாட்டு வளங்களை ஒழுங்கமைத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்பவற்றுக்குப் பொறுப்பாகவிருந்தது.

திறைசேரி மீள்கட்டமைப்புச் செயன்முறையினைத் தொடர்ந்து, 1993 சனவரி 01 ஆந் திகதியன்று இதுவரை காணப்பட்ட திறைசேரிப் பிரிவுகள் திணைக்களங்களாகத் தரமுயர்த்தப்பட்டன. இதன் விளைவாக, வெளிநாட்டு வளங்கள் பிரிவானது வெளிநாட்டு வளங்கள் திணைக்களமாக தரமுயர்த்தப்பட்டது. வெளிநாட்டு வளங்கள் திணைக்களமானது பணிப்பாளர் நாயகம் ஒருவரினால் தலைமை வகிக்கப்படுவதுடன் மேலதிகப் பணிப்பாளர் நாயகங்கள், பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய உதவி பதவியினர் மூலம் ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது.

FaLang translation system by Faboba