gov lk large

 

 

இலங்கை அரசாங்கமும் சீன அபிவிருத்தி வங்கியும் ஐ.அ.டொ 500 மில்லியன் நிதி வசதிக்கான ஒப்பந்தமொன்றில் 2020 மார்ச் 18 ஆந் திகதி அலரி மாளிகையில் கைச்சாத்திட்டன. இதில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் திறைசேரி செயலாளர் திரு. எஸ். ஆர். ஆட்டிகல மற்றும் சீன அபிவிருத்தி வங்கியின் சார்பாக சீன அபிவிருத்தி வங்கியின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் திரு. Wang Wei ஆகியோர் கையொப்பமிட்டதுடன் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சீன தூதரகத்தின் பொறுப்பாளர் திரு. Hu Wei மற்றும் சீன அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவர் திரு. Ma Xin ஆகியோர் சாட்சியாளர்களாகவும் கையொப்பமிட்டனர்.

இலங்கை அரசாங்கம், சீன அரசு மற்றும் சீன அபிவிருத்தி வங்கியிடம் நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கோரியதன் பேரில், இந்நிதி வசதி கிடைக்கப் பெறவுள்ளது.

வெளிநாட்டு நாணய தவணை நிதி வசதி (FTFF) 2020, நாணய தவணை நிதி வசதி 2018 ஐ விட மேம்பட்டதாக இருந்தாலும், இந்த நாணய தவணை நிதி வசதி 2020 ஆனது 2018 இனைவிட மேம்பட்டதொன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது, நாணய தவணை நிதி வசதி 2018 இல் காணப்பட்ட 3 வருட சலுகைக் காலத்துடன் 8 வருட முதிர்ச்சிக் காலத்திலிருந்து 10 வருட முதிர்ச்சிக் காலமாக நீடிக்கப்பட்டுள்ளது. வட்டி வீதமும் 2018 இனைவிட மேம்பாட்டினைக் கொண்டுள்ள அதேவேளை, 2018 இனைவிட கறைவாகக் காணப்படுகின்றது. இந்த ஐ.அ.டொ 500 மில்லியன் நிதி வசதி அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் வழங்கப்படுவதுடன் இது நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு இருப்புக்களை அதிகரிக்கும்.

2020 மார்ச் 18 ஆந் திகதி நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

 

FaLang translation system by Faboba